FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இசையமைப்பாளராக மாறிய பாடகி!

இசையோடு கலந்த வார்த்தைகளை இனிமையான குரலில் கேட்கும் போதுதான் ஒரு பாடல் உயிர் பெறுகிறது.

Updated On : 18 அக்டோபர் 2019, 5:45 pm IST
பாடகி ஸ்வாகதா
பகிர்:

இசையோடு கலந்த வார்த்தைகளை இனிமையான குரலில் கேட்கும் போதுதான் ஒரு பாடல் உயிர் பெறுகிறது. அப்படி மயக்கும் குரலால் தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்வாகதா.

அவரின் குரலில் காற்றிமொழி படத்தில் 'டர்ட்டி பொண்டாட்டி', லட்சுமி படத்தில் 'ஆலா ஆலா' பாடல்கள் உள்ளிட்ட நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். இப்போது வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடி இருக்கிறார்.

தற்போது அவருக்குள் இருக்கும் இன்னொரு பரிணாமமும் வெளிப்பட்டுள்ளது. இசையையும் வார்த்தைகளையும் உள்வாங்கி அற்புதமான குரலில் பாடல்களை வெளிப்படுத்தும் ஸ்வாகதா தற்போது ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப் பாடலை விடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். விடியோவில் அவரே தலைமை நாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப்பொறுப்பையும் ஏற்று அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை யூட்யூபில் வெளியிட்டிருக்கிறார். இளைஞர்களிடையே அப்பாடல் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இசை அமைப்பாளர்கள் கதாநாயகர்களாக நடிப்பதைப் போன்று ஒரு பாடகியான ஸ்வாகதா இசை அமைப்பாளராக பரிணாமம் அடைந்துள்ளார். முகிலன் முருகேசன் இயக்கியுள்ள இந்த பாடலின்  துவக்கத்தில், "நிலா வரும் சாமம் தோறும் மாமன் ஞாபகம்" என்ற வரிகளில் இசையும் அவரது குரலும் மெஸ்மரிசம் செய்கிறது.

Advertisement

Advertisement

ஸ்வாகதா இசையமைத்து, நடித்த அடியாத்தே பாடலை கெளதம் வாசுதேவ் மேனன் , யுவன் ஷங்கர் ராஜா, ரா. பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குனர் திரு,  அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது !

அடியாத்தே காணொளி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments