முகப்பு
செய்திகள்

ரம்யா பாண்டியனை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும்: இயக்குநர்களுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார் நடிகர் விவேக். ட்விட்டரில் அவர் கூறியதாவது...

Updated On : 2 செப்டம்பர், 2019 at 2:13 PM
பகிர்:

சமீபகாலமாகத் தமிழ்ச் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பேசப்பட்டவர் ரம்யா பாண்டியன். அவருடைய புதிய புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். எனினும் அவர் இதுவரை மிகக்குறைவான தமிழ்ப் படங்களிலேயே நடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார் நடிகர் விவேக். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பண்பும் அழகும் பதில்களில் பணிவும் கொண்ட ரம்யாபாண்டியன், தன் நடிப்பால் ஜோக்கர், ஆண்தேவதை படங்களில் மிளிர்ந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதைச் சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரைத் தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள் என்று எழுதி பிரபல இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், அட்லி ஆகியோரையும் டேக் செய்துள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.