செய்திகள்

செப்டம்பர் 19 அன்று வெளியாகவுள்ள பிகில் படப் பாடல்கள்!

ரஹ்மான் இசையமைப்பில் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

எழில்

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஹ்மான் இசையமைப்பில் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிகில் படத்தின் பாடல்கள் வரும் 19 அன்று வெளியிடப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. எப்போதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தளபதி விஜய்யின் பேச்சைக் கேட்க ஆவலாக இருப்பேன். இந்தமுறை நானே பாடல் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன். ரஹ்மான் சாரின் இசைக்காக சிறந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம் என்று பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT