முகப்பு
செய்திகள்

தமிழ்ப் படங்களை விளம்பரப்படுத்தும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்!

தமிழ்ப் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விளம்பரப்படுத்தும் பணியைத் தொடங்கிவிட்டார் ஹர்பஜன் சிங்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:04 AM
பகிர்:

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த மாதம் இதுபோன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.

என் மூலமாக தமிழ் சினிமா  விளம்பரங்கள், ஒப்பந்தங்கள், வியாபாரம், சமூக வலைதள விளம்பரங்கள் செய்ய விரும்பினால் தொடர்புக்கு அணுகவும் - என் அன்பு தம்பி சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன் என்று எழுதினார். ட்விட்டரில் ஹர்பஜனை 1 கோடி பேருக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். 

இந்நிலையில் தமிழ்ப் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விளம்பரப்படுத்தும் பணியைத் தொடங்கிவிட்டார் ஹர்பஜன் சிங். ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் பேச்சுலர் என்கிற படத்தின் முதல் பார்வை போஸ்டரை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். பேச்சுலர் படத்தை அறிமுக இயக்குநர் சதிஷ் செல்வகுமார் இயக்குகிறார். திவ்யா பாரதி என்கிற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இசை - ஜி.வி. பிரகாஷ், தயாரிப்பு - ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபாக்டரி. 

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இந்த வருடம் ஏற்கெனவே 4 படங்கள் வெளியாகிவிட்டன. இதுதவிர - ஐயங்கரன், 100% காதல், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலை தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.