செய்திகள்

தீபாவளிக்கு முன்பு, அக்டோபர் 4 அன்று வெளியாகவுள்ள 3 முக்கியமான தமிழ்ப் படங்கள்!

அக்டோபர் 4 அன்று தனுஷ், விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷ் நடித்த படங்கள் வெளிவரவுள்ளன.

எழில்

தீபாவளிக்கு முன்பு வெளியாகிவிடவேண்டும் என்கிற துடிப்பில் பல தமிழ்ப் படங்கள் அடுத்த ஒன்றரை மாத இடைவெளிக்குள் வெளிவரத் தயாராகிவிட்டன. 

அக்டோபர் 4 அன்று தனுஷ், விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷ் நடித்த படங்கள் வெளிவரவுள்ளன.

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணைந்துள்ளார்கள். இப்படத்தை தாணு தயாரிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இசை - ஜி.வி. பிரகாஷ்.

விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் - சங்கத் தமிழன். இயக்கம் - விஜய் சந்தர். இவர் இதற்கு முன்பு வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கியுள்ளார். 

தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா நடித்த 100% லவ் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் - 100% காதல். ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர், தம்பி ராமையா நடித்துள்ள இப்படத்தை எம்.எம். சந்திரமெளலி இயக்கியுள்ளார். 

ஒரே நாளில் மூன்று முக்கிய நடிகர்களின் படங்கள் வெளிவருவதால் இப்படங்களின் முடிவுகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் கிடையாது: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT