செய்திகள்

காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியீடு!

சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.

DIN


சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது. 

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். செப்டம்பர் 20 அன்று வெளிவரவுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. இந்த டிரெய்லர் குறித்து சமூகவலைத்தளங்களில் இரு விதமாகவும் கருத்துகள் வெளியாகின. ஒரு தரப்பினர் நல்ல ஆக்‌ஷன் படமாக இருக்கப்போகிறது என்று கருத்து தெரிவித்தார்கள். அதேசமயம் எதிர்மறையான கருத்துகளும் வெளிவந்தன. டிரெய்லர் இன்னும் கூடுதல் சுவாரசியத்துடன் அமைந்திருக்கலாம். ஒருவேளை, படத்தின் ரகசியங்களை வெளியிடாதவாறு டிரெய்லரை வேண்டுமென்றே இவ்வாறு அமைத்திருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். முன்னதாக, இதே டிரெய்லர் நேற்று தெலுங்கு மொழியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT