செய்திகள்

பிகில் படத்தின் வெளியீட்டுத் தேதி தொடர்பாக வதந்தி பரப்ப வேண்டாம்: அர்ச்சனா கல்பாத்தி வேண்டுகோள்!

பிகில் படம் தீபாவளி தினத்தன்று, ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்று வெளியான செய்திகளுக்கு...

எழில்

பிகில் படம் தீபாவளி தினத்தன்று, ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்று வெளியான செய்திகளுக்கு அப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார்.

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஹ்மான் இசையமைப்பில் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பிகில் படத்தின் பாடல்கள் வரும் 19 அன்று வெளியிடப்படுகின்றன. பிகில் பாடல் வெளியீட்டு விழா, சன் டிவியில் வரும் ஞாயிறு அன்று (செப். 22) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

தீபாவளி பண்டிகை அக்டோபர் 27, அதாவது ஞாயிறு அன்று வருவதால் பிகில் பட வெளியீடு தொடர்பாகக் குழப்பம் ஏற்பட்டது. வெள்ளி, சனி ஆகிய இரு விடுமுறை தினங்களையும் பயன்படுத்தும் விதத்தில் அக்டோபர் 25 அன்று வெளியாகவேண்டும் என்றொரு கருத்தும் நிலவியது. ஆனால், விஜய் படம் தீபாவளி பண்டிகை தினத்தன்று வெளியாவதையே ரசிகர்கள் விரும்புவதால் ஞாயிறு அன்றுதான், அதாவது தீபாவளி தினத்தன்று பிகில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

படத்தின் வெளியீட்டுத் தேதி தொடர்பாக யூகத்தை வெளியிட்டு, வதந்திகளைப் பரப்பவேண்டாம். படம் தணிக்கையான பிறகுதான் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கமுடியும். படம் வசூலில் சாதனைகளை நிகழ்த்தும் வண்ணம் வெளியீட்டுத் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என நீங்கள் நம்பவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கம்பன் கழகம் சாா்பில் இரு நாள் ‘கம்பன் திருவிழா- 2025’ இன்று தொடக்கம்

மெஹ்ரெளலி- பதா்பூா் சாலையில் ரூ.387 கோடியில் வடிகால் சீரமைப்பு பணி: பொதுப் பணித் துறை திட்டம்

அறுபடை வீடு ஆன்மிக பயண பக்தா்கள் திருச்செந்தூரில் சிறப்பு தரிசனம்

கரோல் வாகன நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு பணிகள் செய்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை

பழைய அப்பனேரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT