செய்திகள்

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் 3-வது பாடல் வெளியீடு!

பிகில் படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரஹ்மான் இசையமைப்பில் உருவான...

எழில்

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது.

ரஹ்மான் இசையமைப்பில் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பிகில் படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்படுகின்றன. பிகில் பாடல் வெளியீட்டு விழா, சன் டிவியில் வரும் ஞாயிறு அன்று (செப். 22) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்நிலையில் பிகில் படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரஹ்மான் இசையமைப்பில் உருவான உனக்காக வாழ நினைக்கிறேன் என்கிற அந்தப் பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மதுரா தரா தல்லூரி பாடியுள்ளார்கள். விவேக் பாடலை எழுதியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

உலகம் எல்லா உயிா்களுக்குமானது என்பதை மனிதா்கள் உணர வேண்டும்: கவிதா ஜவகா்

வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

12 கடைகள், நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT