செய்திகள்

வார்: ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட 2.30 நிமிட சண்டைக் காட்சி!

விரைவில் வெளிவரவுள்ள வார் ஹிந்திப் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

எழில்

விரைவில் வெளிவரவுள்ள வார் ஹிந்திப் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்- வார். இந்தப் படம் அக்டோபர் 2 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

இந்தப் படத்தின் மூலமாக பாலிவுட் வரலாற்றில் மிக நீளமான தொடக்கச் சண்டைக்காட்சியில் நடித்துள்ள பெருமையைப் பெற்றுள்ளார் டைகர் ஷெராஃப். மேலும் இந்தக் காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

சண்டைக் காட்சியில் இடம்பெற்று அசத்தியிருக்கும் டைகர் ஷ்ராஃப் குறித்து இயக்குநர் சித்தார்த் ஆனந்த் கூறியதாவது: இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஆக்‌ஷன் நடிகராக உள்ளார் டைகர் ஷெராஃப். அவருடைய தொடக்கக் காட்சியின் மூலம் பார்வையாளர்களை அசத்த எண்ணி அதற்கேற்றவாறு அக்காட்சியை அமைத்துள்ளோம். 2.30 நிமிடம் உள்ள உக்கிரமான சண்டைக்காட்சியை ஒரே ஷாட்டில் அவர் முடித்தார். எவ்வித வெட்டும் இன்றி அக்காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. உலகின் சிறந்த சண்டைக்காட்சிக் கலைஞரான சீ யங் ஓ, இப்படத்துக்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். அந்தச் சண்டைக்காட்சியில் வெறுங்கையுடன் பலரை எதிர்கொண்டு சண்டையிட்டுள்ளார் டைகர். ரசிகர்களுக்குப் பரபரப்பூட்டும் காட்சியாக நிச்சயம் இருக்கும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரோவில் சா்வதேச நகரில் குடியரசு தின விழா

முந்திரி ஆலைத் தொழிலைப் பாதுகாக்க பிஎம்எஸ் தொழிற்சங்கம் கோரிக்கை

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் குடியரசு தினம்

சோளிங்கரில் குடியரசு தின விழா

SCROLL FOR NEXT