பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படம் அமேஸான் பிரைமில் ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது.
2012-ல் ஆயுஷ்மண் குர்ரானா, யாமி கெளதம், அன்னு கபூர், பூஜா குப்தா நடிப்பில் ஷுஜித் சிர்கார் இயக்கிய ஹிந்திப் படம் - விக்கி டோனர் (Vicky Donor). நடிகர் ஜான் ஆப்ரஹாம் இப்படத்தைத் தயாரித்தார். சிறந்த பொழுதுபோக்குப் படமாகத் தேசிய விருதைப் பெற்றதோடு நன்கு ஓடி ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.
இந்தப் படம் தற்போது தமிழில் தாராள பிரபு என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கிருஷ்ண மாரிமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். தன்யா ஹோப், விவேக் போன்றோர் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் வெளியான இந்தப் படம் அமேஸான் பிரைமில் ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.