செய்திகள்

கரோனா அச்சுறுத்தலால் 3 நாள்கள் மட்டுமே திரையரங்கில் ஓடியது: தாராள பிரபு படம் அமேஸான் பிரைமில் வெளியீடு!

பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படம் அமேஸான் பிரைமில் இன்று வெளியாகியுள்ளது.

DIN

பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படம் அமேஸான் பிரைமில் இன்று வெளியாகியுள்ளது.

2012-ல் ஆயுஷ்மண் குர்ரானா, யாமி கெளதம், அன்னு கபூர், பூஜா குப்தா நடிப்பில் ஷுஜித் சிர்கார் இயக்கிய ஹிந்திப் படம் - விக்கி டோனர் (Vicky Donor). நடிகர் ஜான் ஆப்ரஹாம் இப்படத்தைத் தயாரித்தார். சிறந்த பொழுதுபோக்குப் படமாகத் தேசிய விருதைப் பெற்றதோடு நன்கு ஓடி ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.

இந்தப் படம் தற்போது தமிழில் தாராள பிரபு என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கிருஷ்ண மாரிமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். தன்யா ஹோப், விவேக் போன்றோர் நடித்துள்ளார்கள்.

மார்ச் 13 அன்று வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் 3 நாள்கள் மட்டுமே ஓடியது. இதன்பிறகு கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளியான நான்காவது நாளிலிருந்து இந்தப் படம் தமிழ்நாட்டில் எங்கும் திரையிடப்படவில்லை. எனினும் நிலைமை சரியான பிறகு மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. நிலைமை சரியாகி மீண்டும் திரையரங்குகள் இயங்கத் தொடங்கும்போது புதிய படங்கள் வெளியாகும் சூழலில் தாராள பிரபு படம் தற்போது அமேஸான் பிரைமில் இன்று முதல் வெளியாகியுள்ளது. படம் வெளியான முதல் மூன்று நாள்களில் இந்தப் படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தன. இதனால் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தற்போது அமேஸான் பிரைமில் அதிக ரசிகர்கள் படத்தைப் பார்க்கும் ஒரு வாய்ப்பும் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

SCROLL FOR NEXT