ரஜினி சம்மதத்துடன் சந்திரமுகி 2-வில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்: பி.வாசு இயக்கம்
ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005-ல் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் - சந்திரமுகி.
ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005-ல் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் - சந்திரமுகி.
தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது.
என்னுடைய அடுத்த படம், ரஜினி சாரின் சந்திரமுகி 2. அவருடைய சம்மதத்துடன் இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று அறிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். சன் டிவி தயாரிக்கும் இந்தப் படத்தை பி.வாசு இயக்குகிறார்.
2017-ல் ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தை இயக்கினார் பி.வாசு. அதன்பிறகு அவர் இயக்கும் தமிழ்ப்படம் இது.
சந்திரமுகி 2 படத்துக்காக சன் டிவி வழங்கிய முன்தொகையிலிருந்து ரூ. 3 கோடியை கரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.