செய்திகள்

கரோனா வைரஸ் பாதிப்பு முடிந்த பிறகு இதைக் கட்டாயமாகச் செய்யுங்கள்: நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள்

உள்ளூரில் விளையும், விற்கப்படும் பழங்கள், காய்கறிகளை வாங்குங்கள். இந்திய நிறுவனங்களின் துணிகளையும் ஷுக்களையும் வாங்குங்கள்.

DIN

கரோனா வைரஸ் பாதிப்பு முடிந்த பிறகு உள்ளூர் வியாபாரிகளுக்கு உதவுங்கள் எனப் பிரபல நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 7,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளதாவது:

கரோனா வைரஸின் பாதிப்பு முடிவடைந்த பிறகு, நாம் நாட்டுக்கு உதவும் விதத்தில் நாம் நடந்துகொள்ளவேண்டும். விடுமுறையை இந்தியாவில் கழியுங்கள். உள்ளூர் ஹோட்டல்களில் சாப்பிடுங்கள், உள்ளூரில் விளையும், விற்கப்படும் பழங்கள், காய்கறிகளை வாங்குங்கள். இந்திய நிறுவனங்களின் துணிகளையும் ஷுக்களையும் வாங்குங்கள். உள்ளூர் வியாபாரிகளுக்கு உதவுங்கள். நம்முடைய உதவியில்லாமல் இந்த வணிக நிறுவனங்களால் மீண்டும் சகஜ நிலைமைக்குத் திரும்பமுடியாது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT