செய்திகள்

புதிய படத்தின் தலைப்பு, அறிவிப்பு டீசரை வெளியிட்டார் விஷ்ணு விஷால்

ரசிகர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி புதிய பட அறிவிப்பு டீசரை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

DIN

தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவது குறித்து ரசிகர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி புதிய பட அறிவிப்பு டீசரை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

2009-ல் வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் விஷ்ணு விஷால். 2018-ல் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் தான் அவர் கடைசியாக நடித்து வெளிவந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

தன்னுடைய புதிய படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பை இன்று வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் புதிய பட அறிவிப்பை வெளியிடுவது குறித்து விஷ்ணு விஷாலுக்குக் குழப்பம் ஏற்பட்டது.

தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை ஏப்ரல் 11 அன்று வெளியிடலாமா என ட்விட்டரில் ரசிகர்களிடம் கருத்து கேட்டார் நடிகர் விஷ்ணு விஷால். ரசிகர்கள் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்படுவதாகக் கூறினார்.

ட்விட்டரில் அவருடைய கேள்விக்கு 68% ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அதாவது திட்டமிட்டபடி ஏப்ரல் 11 அன்று அறிவிப்பை வெளியிட ஆதரவு தெரிவித்தார்கள். 32% ரசிகர்கள் மட்டும் இச்சமயத்தில் வேண்டாம், கரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்த பிறகு அறிவியுங்கள் என வாக்களித்திருந்தார்கள்.

இந்நிலையில் தனது புதிய பட அறிவிப்பு தொடர்பான டீசரை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். மோகன் தாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை முரளி கார்த்திக் இயக்குகிறார். விஷ்ணு விஷால் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - சுந்தரமூர்த்தி கே.எஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT