சில்லுக் கருப்பட்டி இயக்குநரைப் பாராட்டிய சாய் பல்லவி
கடந்த வருட இறுதியில் வெளியான சில்லுக் கருப்பட்டி படத்தைப் பாராட்டியுள்ளார் நடிகை சாய் பல்லவி...
கடந்த வருட இறுதியில் வெளியான சில்லுக் கருப்பட்டி படத்தைப் பாராட்டியுள்ளார் நடிகை சாய் பல்லவி.
முத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கிய படம் - சில்லுக் கருப்பட்டி. இசை - பிரதீப் குமார். சூர்யாவின் 2டி நிறுவனமும் டிவைன் புரொடக்ஷனும் இணைந்து தயாரித்தன.
இந்நிலையில் இந்தப் படத்தைத் தற்போது பார்த்துள்ள நடிகை சாய் பல்லவி, இயக்குநர் ஹலிதா ஷமீமைப் பாராட்டியுள்ளார். அவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் கூறியுள்ளதாவது:
நானும் என் பெற்றோர்களும் படம் பார்த்து மிகவும் உணர்வுபூர்வமானோம். இதமாக உணர வைத்ததற்கு நன்றி. இதுபோன்ற அற்புதங்களை மேலும் நீங்கள் படைக்கவேண்டும் என்று பாராட்டியுள்ளார்.