செய்திகள்

பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் உடல் தகனம்: இறுதி அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர்

புற்றுநோயால் உயிரிழந்த மூத்த நடிகர் ரிஷி கபூரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

DIN

புற்றுநோயால் உயிரிழந்த மூத்த நடிகர் ரிஷி கபூரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் ரிஷி கபூர் இன்று காலமானார். அவருக்கு வயது 67.

2018-ல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரிஷி கபூர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிஷி கபூர் அமெரிக்காவின் நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, மும்பைக்கு திரும்பினார். ரிஷி கபூருடன் அவரது மனைவியும், நடிகையுமான நீத்து கபூரும் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ரிஷி கபூருக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது ஷாருக் கான், ஆலியா பட், ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுபம் கெர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் மும்பையில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். ரிஷி கபூரின் மரணத்துக்கு பிரதமர் மோடியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்கள். பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். ரிஷி கபூருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவருடைய மகளான ரித்திமா கபூர், தில்லியிலிருந்து மும்பை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவரால் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொள்ளமுடியாமல் போனது.

ரிஷி கபூரின் உடல் இன்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ரிஷி கபூர் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி நீது கபூர், மகன் ரன்பீர் கபூர், ரந்திர், ராஜிவ் கபூர், கரீனா, அர்மான், ஆதர் போன்றோரும் திரையுலகைச் சேர்ந்த அபிஷேக் பச்சன், ஆலியா பட், சயிப் அலி கான் போன்றோரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா ஆஜர்!

வாக்குத் திருட்டு: தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி தடுத்து நிறுத்தம்!

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க அவகாசம்

சென்னையில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: ஓடுதளத்தில் மற்றொன்று! திக் திக் நிமிடங்கள்.. நடந்தது என்ன?

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT