முகப்பு
செய்திகள்

அஸ்ஸாம் மாநிலத்துக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 1 கோடி வழங்கிய நடிகர் அக்‌ஷய் குமார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்துக்கு நடிகர் அக்‌ஷய் குமார் வெள்ள நிவாரணமாக...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:


தேசிய அளவில் கரோனா தொற்றால் மக்கள் அவதிப்படும் சூழலில், அஸ்ஸாம் மக்கள் வெள்ளத்தால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 30 மாவட்டங்களில் உள்ள சுமாா் 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. இதையடுத்து, அங்கு வசித்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். சுமாா் 50 லட்சம் போ் பாதிக்கப்பட்டார்கள். 80 போ் இறந்துள்ளார்கள். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்துக்கு நடிகர் அக்‌ஷய் குமார் வெள்ள நிவாரணமாக ரூ. 1 கோடி வழங்கியதற்கு அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால் நன்றி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

அஸ்ஸாம் மாநிலத்துக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 1 கோடி வழங்கியதற்கு நன்றி அக்‌ஷய் குமார். இக்கட்டான சூழல்களில் நீங்கள் எப்போதும் அனுதாபத்தையும் ஆதரவையும் அளித்துள்ளீர்கள். அஸ்ஸாமின் சிறந்த நண்பராக உங்களுக்குக் கடவுள் எல்லாவிதமான ஆசிர்வாதங்களையும் வழங்கட்டும் என்று கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →