செய்திகள்

சுசாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரிய நடிகை ரியாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

DIN

பிகாரில் பதிவு செய்யப்பட்ட நடிகர் சுசாந்த் சிங் மரண வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரிய நடிகை ரியாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சுசாந்த் சிங் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தனது மும்பை இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். இந்த வழக்கை மும்பை போலீஸாா் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினா் மீது பிகாா் தலைநகா் பாட்னாவில் சுசாந்த் சிங்கின் தந்தை புகாா் அளித்திருந்தாா்.

சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.15 கோடி பணத்தை ரியாவின் குடும்பத்தினா் தவறாகக் கையாண்டதாகவும் அவா் குற்றம்சாட்டினாா். இதன் அடிப்படையில் பண பரிவா்த்தனை மோசடி வழக்கை அமலாக்கத் துறையினா் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பாட்னா போலீஸாா் விசாரித்து வந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ புதிதாக வழக்குப் பதிவு செய்து சிலரை குற்றம்சாட்டப்பட்டவா்களாக சோ்த்துள்ளது.

சுசாந்த் சிங் தற்கொலை தொடா்பாக பிகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா மனு தாக்கல் செய்திருந்தாா். 

இந்நிலையில் ரியா மனு மீது தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. பிகாரில் பதிவு செய்யப்பட்ட சுசாந்த் சிங் மரண வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரிய ரியாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுசாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறை இதுவரை சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிப்பதா?: திருமாவளவனுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

ஒன்றாக இணைந்த குடும்பம்...பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவு!

வசந்த் ரவியின் இந்திரா டிரைலர்!

இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்: அமைச்சர் கே.என். நேரு

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

SCROLL FOR NEXT