செய்திகள்

டிஸ்கவரி நிகழ்ச்சியில் அக்‌ஷய் குமார்

பிரதமர் மோடி, ரஜினிக்கு அடுத்ததாக ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர்...

DIN

பிரதமர் மோடி, ரஜினிக்கு அடுத்ததாக ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பங்கேற்கிறார்.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மேன் வொ்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக அளவில் சிறப்புப் பெற்றது. பியா் கிரில்ஸ் என்ற சாகச வீரா், மயிா் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடா்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து உலக அளவில் ரசிகா்களைப் பெற்றுள்ளாா். சமீபமாக இந்த நிகழ்ச்சியில் உலகின் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்கும் பகுதிகள் இடம் பெற்று வருகின்றன. தற்போது இந்த நிகழ்ச்சி தான் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற பெயரில் ஒளிபரப்பாகிறது.

சமீபத்தில் இந்நிகழ்ச்சியில், நடிகா் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளா் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினாா். இது ரஜினிகாந்த் பங்கேற்ற முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற சிறப்பையும் பெற்றது. கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் இந்த நிகழ்ச்சியை வழங்கியது. ரஜினிக்கு முன்பு 2019-ல் பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிலையில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் அடுத்ததாகப் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பங்கேற்கிறார். ட்விட்டரில் இத்தகவலை அவர் அறிவித்துள்ளார். 

செப்டம்பர் 14 அன்று டிஸ்கவரி தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முறையாக பராமரிக்கப்படாத மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகம்! சீரமைக்க கோரிக்கை!

துராந்தர்... சாரா அர்ஜுன்!

வரலாறு காணாத மோசமான நவம்பர் மாதம்! சந்தேகமேயில்லை

வெய்யிலுகந்த வேளை... கரீஷ்மா டன்னா!

வளவனூர் அருகே சிறுத்தை புலி நடமாட்டம்!

SCROLL FOR NEXT