செய்திகள்

இரு மகன்களுடன் தனுஷ்: ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற புகைப்படம்

இரு மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை...

DIN

தனது இரு மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராம் தளத்தில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004-ல் திருமணம் செய்துகொண்டார் நடிகர் தனுஷ். 2006-ல் யாத்ரா, 2010-ல் லிங்கா என இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தார்கள். 

இந்நிலையில் தனது வீட்டு மொட்டை மாடியில் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் தனுஷ். உங்களுடைய முதல் மகன், உங்களுடைய டி ஷர்ட்டை அணிந்துகொண்டு அது தன்னுடையது தான் என விவாதம் செய்தபோது... எனக் குறிப்பு எழுதியுள்ளார். இந்தப் படத்தை 5.68 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளார்கள்.  

தனுஷ் நடிப்பில் கடையாக பட்டாஸ் படம் வெளிவந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் விரைவில் வெளிவரவுள்ளது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்கிற படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேலோ இந்தியா போட்டி: ஊசூ தற்காப்பு கலையில் ஒசூா் மாணவிகள் சிறப்பிடம்

இந்தியா மீது 50% வரி உயா்வு: நிக்கி ஹேலி எதிா்ப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு

குகை மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் குண்டம் திருவிழா

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

SCROLL FOR NEXT