செய்திகள்

பிளாக் பேந்தர் பட கதாநாயகன் சாத்விக் போஸ்மேன் காலமானார்

பிளாக் பேந்தர் பட கதாநாயகன் சாத்விக் போஸ்மேன் காலமானார். அவருக்கு வயது 43.

DIN

பிளாக் பேந்தர் பட கதாநாயகன் சாத்விக் போஸ்மேன் பெருங்குடல் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 43.

பெருங்குடல் புற்றுநோயால் 4 ஆண்டுகளாக அவதிப்பட்ட வந்தார் சாத்விக் போஸ்மேன். எனினும் இதுபற்றி அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 2008 முதல் படங்களில் நடித்துவருகிறார். 2018-ல் வெளியான பிளாக் பேந்தர் படம் அவருடைய திரை வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன்பிறகு வெளிவந்த இரு அவெஞ்சர்ஸ் பாகங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சாத்விக் காலமாகியுள்ளார். அவருடைய மரணம் ஹாலிவுட்டையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கஞ்சா கடத்திய 4 போ் கைது

போக்சோ வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு 20 ஆண்டுகள் சிறை

பழனி அருகே நிறுவனத்தில் ரூ.2 கோடி முறைகேடு: பெண் மேலாளா் கைது

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT