செய்திகள்

நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி

DIN

மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என்று சொன்னதற்காக நடிகர் விஜய்க்கும் படக்குழுவினருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார். 

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேடர்ஸ் தகவல் தெரிவித்தது.

மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகக் கடந்த வாரம் செய்தி ஒன்று வெளியானது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இதை மறுத்தது. படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட புகழ்பெற்ற ஓடிடி நிறுவனங்கள் எங்களை அணுகின. ஆனால், நாங்கள் திரையரங்குகளில் வெளியிடுவதையே விரும்புகிறோம். தற்போது நிலவி வரும் நெருக்கடிகளிலிருந்து திரைத்துறை மீண்டு வருவதற்கான நேரம் இது. திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுடனும், தமிழ் திரைத் துறை மீண்டு வருவதற்கும் துணை நிற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். விரைவில் நல்ல செய்தியுடன் உங்களிடம் வருவோம் என்று எதிர்பார்க்கிறோம் என படக்குழு அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் இன்று பேசியதாவது:

தமிழகத்தில் சாதாரண மக்கள் அனைவரும் திரையரங்குகளில் படங்களைப் பார்ப்பது தான் காலம்காலமாக உள்ள வழக்கம். கரோனா காலத்தில் ஓடிடி என்பது தற்காலிக ஏற்பாடு. அது கூட ஏற்றுக்கொள்ளலாம். நிரந்தரத் தீர்வாக இருக்கக்கூடாது என்று கருத்து சொல்லியிருந்தேன். அதை ஏற்று, மாஸ்டர் படக்குழுவினர் திரையரங்குகளில் தான் படத்தை வெளியிடுவோம் என்று சொன்னதற்காக படத்தயாரிப்புக் குழுவினருக்கும் அதில் நடித்த முன்னணி நடிகரும் அன்புச் சகோதரருமான விஜய்க்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டால் அரசு பரிசீலிக்கும் என்றார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT