செய்திகள்

பாடகி இசைவாணியை வாழ்த்திய இசைஞானி

பாடகி இசைவாணியை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா...

DIN

2020-ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பெண்களின் பட்டியலில் இயக்குநர் பா. இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவைச் சேர்ந்த பாடகி இசைவாணி இடம்பிடித்துள்ளார். 

கானா பாடல்களைப் பாடுவதில் கவனம் பெற்றுள்ள இசைவாணி, உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளித்து, நேர்மறையான எண்ணங்களை உருவாக்குபவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். அவருக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்துக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் பாடகி இசைவாணியை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. இதுபற்றி இசைவாணி, ட்விட்டரில் தெரிவித்ததாவது:

பிபிசியின் தகவல் தெரிந்து இன்று இசைஞானி ஐயா அவர்கள் என்னை அவருடைய இல்லத்தில் அழைத்து வாழ்த்து தெரிவித்த தருணம்... மகிழ்ச்சி என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT