முகப்பு
செய்திகள்

மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படப்பிடிப்பு தொடக்கம்!

மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 15 டிசம்பர், 2020 at 12:28 PM
பகிர்:

மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சைக்கோ படத்துக்கு அடுத்ததாக விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி வருகிறார்.

அருண் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ள மிஷ்கின் அதன்பிறகு சிம்பு நடிப்பில் ஒரு ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

Advertisement

இந்நிலையில் தனது பிறந்த நாளன்று பிசாசு 2 படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் மிஷ்கின். ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார். இசை - கார்த்திக் ராஜா.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.