செய்திகள்

சோனு சூட், ஷ்ரத்தா கபூரைக் கெளரவித்த பீட்டா இந்தியா

பீட்டா இந்தியா அமைப்பு சார்பில் சைவ உணவு குறித்த பிரசார நிகழ்வுகளில் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்...

DIN

2020-ம் ஆண்டின் சிறந்த சைவப் பிரியர்களாக நடிகர் சோனு சூட், நடிகை ஷ்ரத்தா கபூர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

பீட்டா இந்தியா அமைப்பு சார்பில் சைவ உணவு குறித்த பிரசார நிகழ்வுகளில் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் கலந்துகொண்டுள்ளார். சைவ உணவின் மகத்துவம் குறித்து பல தருணங்களில் பேசியுள்ளார். அதேபோல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் விலங்குகளுக்காகப் பலவேறு தருணங்களில் குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சோனு சூட், ஷ்ரத்தா கபூர் ஆகியோரை 2020-ம் ஆண்டுக்கான சிறந்த சைவப் பிரியர்களாக பீட்டா இந்தியா நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

சோனு சூட், ஷ்ரத்தா கபூர் ஆகிய இருவரும் சைவ உணவை உட்கொள்ள தங்கள் ரசிகர்களை ஊக்கப்படுத்துகிறார்கள் என்று பீட்டா இந்தியாவின் மக்கள் தொடர்பு இயக்குநர் சச்சின் பாங்கரா கூறியுள்ளார். 

இதற்கு முன்பு - பிரதமர் மோடி, அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மா, கங்கனா, ரேகா, சாஹித் கபூர் ஆகியோர் பீட்டா நிறுவனத்தால் சிறந்த சைவப் பிரியர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT