செய்திகள்

தெலுங்குப் படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை தமன்னா! (படங்கள்)

படக்குழுவினர் முன்னிலையில் கேட் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்...

DIN

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. 2006-ல் கேடி படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த ஆக்‌ஷன் படம் சமீபத்தில் வெளியானது. 

கடந்த ஆகஸ்டு மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை என தமன்னா தெரிவித்திருந்தார். இதையடுத்து படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற தமன்னாவிற்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.  பின்னர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கரோனாவிலிருந்து குணமாகியுள்ள தமன்னா, மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். சீட்டிமார் என்கிற தெலுங்குப் படத்தில் கோபிசந்துடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில், படக்குழுவினர் முன்னிலையில் கேட் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் தமன்னா. இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT