முகப்பு
செய்திகள்

பிறந்த நாள் அறிவிப்புகள்: சிம்பு, ராகவா லாரன்ஸ் படங்களில் நடிக்கும் ப்ரியா பவானி சங்கர்

இந்தியன் 2, வான், பொம்மை, குருதி ஆட்டம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
படம் - twitter.com/priya_Bshankar
பகிர்:

நடிகை ப்ரியா பவானி சங்கர் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

இந்த நாளில் இரு படங்களில் அவர் கதாநாயகியாக நடிப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

2017 டிசம்பரில் வெளியான கன்னடப் படம் - மஃப்டி. சிவ ராஜ்குமார், ஸ்ரீமுரளி, ஷான்வி போன்றோர் நடித்த இப்படத்தை நார்தன் இயக்கினார். இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. சிம்பு, கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்துக்கு பத்து தல என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா, இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் இடம்பெற்றுள்ளதை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளார்கள்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் ருத்ரன் படத்திலும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பது பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா, பிறகு விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்றார். பட வாய்ப்புகளை முதலில் மறுத்து வந்த ப்ரியா, மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா ஆகிய படங்களில் அடுத்து நடித்தார்.

இந்த வருடம் - இந்தியன் 2, வான், பொம்மை, குருதி ஆட்டம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். பெல்லி சொப்புலு என்கிற தெலுங்குப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. தெலுங்குப் படத்தில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடித்தார்கள். தமிழில் இப்படத்துக்கு ஓ மணப்பெண்ணே என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். இயக்கம் - கார்த்திக் சுந்தர். இதுதவிர சிம்புதேவன் இயக்கும் கசட தபற என்கிற படத்திலும் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →