ஹிந்தி இணையத் தொடரில் அறிமுகமாகும் அமலா பால்!
இதைவிடவும் சிறந்த அறிமுகத்தை பாலிவுட்டிலும் இணையத் தொடரிலும் நான் பெற முடியாது என அமலா பால் ட்வீட் செய்துள்ளார்.
70களில் பாலிவுட் இயக்குநராக இருந்தவருக்கும் பிரபல நடிகைக்கும் இடையிலான உறவைச் சொல்லும் ஹிந்தி இணையத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகேஷ் பட்டின் விஷேஷ் ஃபிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த இணையத் தொடரில் தஹிர் ராஜ் பாஷின், அமலா பால், அம்ரிதா பூரி போன்ற நடிகர்கள் நடிக்கிறார்கள். அமலா பால், ஹிந்தியில் நடிக்கும் முதல் இணையத் தொடர் இது. புஷ்தீப் பரத்வாஜ் இந்த இணையத் தொடரை இயக்குகிறார்.
இதைவிடவும் சிறந்த அறிமுகத்தை பாலிவுட்டிலும் இணையத் தொடரிலும் நான் பெற முடியாது என அமலா பால் ட்வீட் செய்துள்ளார்.