முகப்பு
செய்திகள்

83 படம்: கபில் தேவின் மனைவி வேடத்தில் நடிக்கும் தீபிகா படுகோன்!

ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் அவரவர் வேடங்களில் உள்ள இந்தப் புகைப்படம்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:54 PM
பகிர்:

1983-ம் ஆண்டு கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை ‘83’ என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது. கபீா்கான் இயக்கி வரும் இந்தப் படத்தில், கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீா் சிங் நடிக்கிறாா். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறாா். 83-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் கதாபாத்திரங்களிலும் பொருத்தமானவா்களைத் தோ்வு செய்து நடிக்க வைத்துள்ளனா். இந்திய கிரிக்கெட் ரசிகா்கள் மத்தியில் இந்தப் படம் பெரிதும் எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தில் தீபிகா படுகோன், கபில் தேவின் மனைவி ரோமி தேவ் வேடத்தில் நடித்துள்ளார். ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் அவரவர் வேடங்களில் உள்ள இந்தப் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.