பாண்டியா - நடாஷா 
செய்திகள்

பாலிவுட் நடிகையுடன் ஹார்திக் பாண்டியா நிச்சயதார்த்தம்: தந்தை வியப்பு!

பாண்டியாவும் நடாஷாவும் விடுமுறைக்குச் செல்கிறார்கள் எனத் தெரியும்... 

எழில்

இளம் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா - நடிகை நடாஷா ஸ்டான்கோவிச் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

ஹிந்தி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நடாஷா, மும்பையில் வசிக்கும் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். நடிப்பு வாய்ப்புக்காக 2012 முதல் இந்தியாவில் வசிக்கும் நடாஷா, சத்யாகிரஹா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் பாண்டியாவும் நடிகை நடாஷாவும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டன்று தனக்கு நடாஷாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக பாண்டியா அறிவித்துள்ளார். இருவருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். 

இந்நிலையில் ஹார்திக் பாண்டியா துபையில் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டது குறித்து வியப்பு தெரிவித்துள்ளார் அவருடைய தந்தை ஹிமான்ஸு. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

நடாஷா அருமையான பெண். மும்பையில் அவரைப் பலமுறை சந்தித்துள்ளோம். துபைக்கு பாண்டியாவும் நடாஷாவும் விடுமுறைக்குச் செல்கிறார்கள் எனத் தெரியும். ஆனால் அங்கு அவர்கள் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொள்வார்கள் என்பது தெரியாது. இது எங்களுக்கு வியப்பைத் தந்தது. எல்லாம் முடிந்தபிறகு தான் எங்களுக்குத் தெரிய வந்தது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT