பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ள ஹிப்ஹாப் தமிழா படம்!
சுந்தர் சி தயாரித்துள்ள நான் சிரித்தால் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா.
சுந்தர் சி தயாரித்துள்ள நான் சிரித்தால் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. இதற்கு முன்பு மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ராணா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் பிப்ரவரி 14 அன்று வெளியாகிறது.