செய்திகள்

ரசிகர்களுடன் நடிகர் மோகன் சந்திப்பு! (விடியோ & படங்கள்)

200 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில், 400 க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்ததாக...

எழில்

1980களில் பிரபல நடிகராக வலம் வந்த மோகன், சமீபத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

நடிகர் மோகன், கடைசியாக 2008-ல் வெளிவந்த சுட்டபழம் என்கிற தமிழ்ப் படத்தில் நடித்தார். பிறகு அவர் தமிழ்ப் படங்களில் நடிக்காத நிலையில் அவரை நேரில் சந்திக்கவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பலரும் நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்து வந்தார்கள். இதையடுத்து அனைவரையும் ஒரே நாளில் சந்தித்து உரையாடியுள்ளார் மோகன்.

சென்னை மைலாப்பூர் வி.ஏ. தெருவில் அமைந்துள்ள நிவேதனம் ஹாலில் தனது ரசிகர்களைச் சந்தித்தார் மோகன். தமிழ்நாடு, இந்தியாவிலிருந்து மட்டுமின்றி மலேசியா, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் அவரது ரசிகர்கள் மோகனைச் சந்திக்க வந்திருந்தார்கள். 

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர், 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில், 400 க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்புபோல மோகன் மீண்டும் படங்களில் நடிக்கவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT