முகப்பு
செய்திகள்

என் காதலை நடிகை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா?: நடிகர் எஸ்.ஜே. சூர்யா கோபம்!

சில முட்டாள்கள் தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள். மான்ஸ்டர் படம் முதல் அவர் என்னுடைய...

Updated On : 16 ஜனவரி, 2020 at 11:45 AM
பகிர்:

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களிலும் நடித்தார். 

மான்ஸ்டர் படத்துக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா - ப்ரியா பவானி சங்கர் ஜோடி, ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் பொம்மை படத்திலும் நடித்து வருகிறார்கள். 

சில நாள்களுக்கு முன்பு, பொம்மை படத்தின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, ப்ரியா பவானி சங்கர் கொஞ்சம் சிம்ரன் போலவும் கொஞ்சம் த்ரிஷா போலவும் இருக்கிறார் அல்லவா என்று குறிப்பிட்டிருந்தார் எஸ்.ஜே. சூர்யா. அதற்கு ஒரு ரசிகர் - சிம்ரன் பாதி, த்ரிஷா பாதி கலந்து செய்த கலவை ப்ரியா பவானி சங்கர் என்று பதில் அளித்தார். அதை எஸ்.ஜே. சூர்யா ரீட்வீட் செய்தார்.

Advertisement

இந்நிலையில் ட்விட்டரில் நேற்று, எஸ்.ஜே. சூர்யா தெரிவித்ததாவது:

நடிகை ப்ரியா பவானி சங்கரிடம் நான் காதலைத் தெரிவித்ததாகவும் அதை அவர் நிராகரித்ததாகவும் சில முட்டாள்கள் தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள். மான்ஸ்டர் படம் முதல் அவர் என்னுடைய நல்ல நண்பர். நல்ல நடிகை அவர். அவ்வளவுதான். என்னை வெறுப்பேற்ற வேண்டாம், அடிப்படை ஆதாரமில்லாத அவதூறுகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.