முகப்பு
செய்திகள்

எடையைக் குறைத்ததால் ஹிந்திப் பட வாய்ப்பை இழந்த கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக ப்ரியா மணி தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

Updated On : 21 ஜனவரி, 2020 at 2:03 PM
பகிர்:

அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக மைதான் என்கிற ஹிந்திப் படத்தில் நடிக்க இருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் அப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக ப்ரியா மணி தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒருநாள் மைதான் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் கீர்த்தி சுரேஷ். ஆனால், அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு மிகவும் இளையவராக இருப்பதாக படப்பிடிப்புக்குப் பிறகு இயக்குநரும் கீர்த்தி சுரேஷும் எண்ணினார்கள். படத்துக்கு ஒப்பந்தமான பிறகு அவர் மேலும் எடை குறைந்துவிட்டார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

இதையடுத்து 27 வயது கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக 35 வயது ப்ரியா மணி கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 1952 முதல் 1962 காலக்கட்டத்திலான இந்தியக் கால்பந்து குறித்த படம் மைதான். கால்பந்துப் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹிம் வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மைதான் படம் நவம்பர் 27 அன்று வெளியாகவுள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பெண்குயின் என்கிற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், ரஜினி நடிப்பில் சிவா இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.