நடிகை அமலா பாலின் தந்தை காலமானார்!
நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஸ், நேற்று கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 61...
நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஸ், நேற்று கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 61.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வர்கீஸ், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு மனைவி அன்னிஸ் பால், மகள் அமலா பால், மகன் அபிஜித் பால் ஆகியோர் உள்ளார்கள்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள குருப்பம்பாடியில் இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. அமலா பாலின் தந்தை மரணத்துக்கு அவருடைய திரையுலக நண்பர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
Advertisement