செய்திகள்

எனக்கு எதுவும் ஆகவில்லை: உடல்நலன் குறித்த வதந்திகளுக்கு ஹேமா மாலினி மறுப்பு

DIN

தன்னுடைய உடல்நலன் குறித்த வதந்திகளுக்கு மூத்த நடிகை ஹேமா மாலினி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆராத்யா ஆகியோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இந்நிலையில் மூத்த நடிகை ஹேமா மாலினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் பலரும் இதுபற்றி சமூகவலைத்தளங்களில் விசாரித்து வந்தார்கள்.

இதையடுத்து தன்னுடைய உடல்நலன் குறித்த வதந்திகளுக்கு ஹேமா மாலினி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியதாவது:

நான் மிகவும் நன்றாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளேன். எனக்கு எதுவும் ஆகவில்லை. உங்களுடைய வாழ்த்துகளாலும் கிருஷ்ணருடைய அருளாலும் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன். அனைவரின் அக்கறைக்கும் மிக்க நன்றி என்றார்.

இதேபோல ஹேமா மாலினியின் மகளான இஷா தியோலும் இன்ஸ்டகிராமில் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளார். என் தாயார் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவருடைய உடல்நலன் குறித்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. அவற்றுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT