நடன இயக்குநர் ஆகிறார் சாய் பல்லவி!
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்குப் படம்...
தான் நடித்து வரும் லவ் ஸ்டோரி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கவுள்ளார் பிரபல நடிகை சாய் பல்லவி.
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்குப் படம் - லவ் ஸ்டோரி. சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவை சேகர் கம்முல்லா இயக்கியிருந்தார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் லவ் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. ஊரடங்குத் தளர்வுகளால் இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. படத்தில் இன்னும் ஒரே ஒரு பாடலைப் படமாக்க வேண்டியிருப்பதால் அப்பாடலுக்கு நடனம் அமைத்துத் தரும்படி சாய் பல்லவியிடம் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதோடு பிரேமம் படத்தில் நடனத்துக்காகப் பாராட்டையும் சாய் பல்லவி பெற்றுள்ளார். இந்நிலையில் இயக்குநரின் கோரிக்கைக்கு சாய் பல்லவி சம்மதம் தெரிவித்து விட்டதால் விரைவில் நடன இயக்குநராக அவர் அறிமுகமாகவுள்ளார்.