தீபிகா படுகோனுடன் முதல்முறையாக ஜோடி சேரும் பிரபாஸ்!
பிரபல நட்சத்திரம் தீபிகா படுகோனுடன் இணைந்து முதல்முறையாக நடிக்கவுள்ளார் பிரபாஸ்.
நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் முதல்முறையாக தீபிகா படுகோனுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ்.
பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற பிரபாஸின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதற்கு அடுத்ததாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது பிரபாஸின் 21-வது படம்.
பிரபல நட்சத்திரம் தீபிகா படுகோனுடன் இணைந்து முதல்முறையாக நடிக்கவுள்ளார் பிரபாஸ். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபிகா படுகோன் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது. அறிவியல் பின்னணியில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி ஃபிலிம்ஸின் 50-வது வருடத்தில் இந்த மெகா பட்ஜெட் படம் உருவாகவுள்ளது.