அருள்நிதி நடித்து வரும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி. இப்படத்துக்கு டைரி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அருள்நிதியின் பிறந்த நாளான இன்று இத்தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன், படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
டைரி படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - யோஹன்.
உண்மைச் சம்பவங்களைக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.