செய்திகள்

தொடரும் மோதல்: பீட்டர் பாலின் மனைவிக்கு ட்விட்டரில் ஆதரவு திரட்டும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!

நடிகை வனிதா விஜயகுமாருடனான மோதலின் அடுத்த கட்டமாக, பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவு திரட்டுகிறார் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.

DIN

நடிகை வனிதா விஜயகுமாருடனான மோதலின் அடுத்தக் கட்டமாக, பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவு திரட்டுகிறார் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.

நடிகை வனிதா விஜயகுமாா் கடந்த மாதம் பீட்டா் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். அவரது மனைவி எலிசபெத் ஹெலன், தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக பீட்டா் பால் மீது வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உடனே புகாா் அளித்தாா். 

இதையடுத்து வனிதா விஜயகுமாரும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும் பேட்டிகளில் ஒருவரையொருவர் விமரிசித்துக்கொண்டார்கள். வனிதா விஜயகுமாரின் திருமணம் தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்ற திரையுலகினரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் வனிதாவின் நடவடிக்கைகளைப் பலரும் விமரிசித்துள்ளார்கள். இதனால், சமூக ஊடகங்களில், தன்னைப் பற்றி அவதூறு தகவல் வெளியிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல நடிகை வனிதா விஜயகுமாா் சென்னை போரூா் எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா்.

தன் திருமணத்துக்கு எதிராகப் பேசும் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் வனிதா விஜயகுமார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: உங்கள் வாழ்க்கை போரடிப்பதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கை எப்போதும் போல அட்டகாசமாக உள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். எனக்குப் பின்னால் என்னுடைய உண்மையான மனிதர் உள்ளார். சட்டரீதியாக நான் செய்தது தவறு என நிரூபிக்க முயலுங்கள். நான் அவர்மீது அளவுகடந்த அன்பில் உள்ளேன். இனிமேலும் அப்படித்தான் இருப்போம். யூடியூப் பேட்டிகளில் புனிதர் போல நடந்துகொண்டு வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் நடந்துகொள்கிறார்கள். இது சட்டத்துக்கு எதிரானது. உங்கள் நாடகங்களை நிறுத்துங்கள். லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி - உங்களுக்குக் கடைசி எச்சரிக்கை. என்னுடைய சொந்த வாழ்க்கையில் நீங்கள் தலையிட வேண்டாம். கஸ்தூரி, மற்றவர்களின் பிரச்னையைக் கொண்டு ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி கவனம் பெற நினைக்கிறீர்கள். என்னுடைய வாழ்க்கையிலிருந்தும் ட்விட்டரிலிருந்து கஸ்தூரியை பிளாக் செய்கிறேன். லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ரவீந்திரன் - இது ஒன்றும் தேர்தலோ ரியாலிட்டி ஷோவோ அல்ல, வாக்குகளை அள்ளுவதற்கு. இது சட்டப் பிரச்னை. உங்களுடைய ஆதரவோ வெறுப்போ யாருடைய வாழ்க்கையையும் மாற்றப் போவதில்லை என்று கூறினார்.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமாருடனான மோதலின் அடுத்தக் கட்டமாக, பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவு திரட்டுகிறார் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நண்பர்களே, #ISupportElizabeth என்கிற ஹேஷ்டேக்கை அனைவரும் பயன்படுத்தி பதிவாக எழுதுங்கள். இதன் காரணம் என்னவென்றால், நீதிமன்றம் விவாகரத்து அளிக்காமல் ஓர் உறவுக்கு நாம் புகழ் சேர்க்கக் கூடாது. எலிசபெத்துக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் உங்களை ஆதரவை அளியுங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT