பாலிவுட்டிலிருந்து விலக பிரபல இயக்குநர் முடிவு!
பாலிவுட்டிலிருந்து விலக பிரபல இயக்குநர் அனுபவ் சின்ஹா முடிவெடுத்துள்ளார்.
பாலிவுட்டிலிருந்து விலக பிரபல இயக்குநர் அனுபவ் சின்ஹா முடிவெடுத்துள்ளார்.
போதும். பாலிவுட்டிலிருந்து நான் விலகுகிறேன் என்று அவர் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
முல்க், ஆர்டிகிள் 15, தப்பட் போன்ற படங்களின் மூலம் புகழை அடைந்தவர் அனுபவ் சின்ஹா. இந்த முடிவை எடுத்ததன் மூலம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் ப்ரொஃபைல் பக்கத்தில் அனுபவ் சின்ஹா (பாலிவுட் அல்ல) என்றும் எழுதியுள்ளார்.
ஹிந்திப் படங்களை இயக்காவிட்டால் வேறு மொழிகளில் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.