செய்திகள்

பாபநாசம் படத்தை இயக்காதது ஏன்?: நடிகை ஸ்ரீப்ரியா பதில்

ஜீத்து ஜோசப் கோரிக்கை வைத்ததால் கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்க முடியாமல் போனதாக நடிகை ஸ்ரீப்ரியா கூறியுள்ளார். 

DIN

ஜீத்து ஜோசப் கோரிக்கை வைத்ததால் கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்க முடியாமல் போனதாக நடிகை ஸ்ரீப்ரியா கூறியுள்ளார். 

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல், கெளதமி நடிப்பில் 2015-ல் வெளியான படம் - பாபநாசம். மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் இது.

இந்நிலையில் சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு நடிகை ஸ்ரீப்ரியா அளித்த பேட்டியில் கூறியதாவது:

படக்குழுவினரிடன் நட்பு இருந்ததால் த்ரிஷ்யம் படத்தைப் பார்க்காமலேயே அனைத்து மொழிகளுக்கான உரிமையை என் கணவர் ராஜ்குமார் சேதுபதி வாங்கினார். தமிழில் அப்படத்தை ரஜினி சாருடன் இணைந்து உருவாக்க இருந்தோம். ஆனால் என் குழுவில் இருந்தவர்கள் கமல் சார் அக்கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் எனச் சொன்னார்கள். அவரும் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். தமிழில் படத்தை இயக்க என்னால் முடியவில்லை. காரணம், ஏற்கெனவே படத்தை இயக்க ஜீத்து ஜோசப் கோரிக்கை வைத்திருந்தார். எனவே வெங்கடேஷைக் கொண்டு தெலுங்கில் இயக்கினேன். படம் அங்கும் வெற்றி பெற்றது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கான், பிடிஐ கட்சிக்கு தடை: பாகிஸ்தான் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது காலணி தாக்குதல்!

ஹாட் சாக்கலேட்... யாஷிகா ஆனந்த்!

”படையப்பா” டைட்டில் இப்படித்தான் வைத்தோம்! விளக்கிய Rajini

முதல் டி20: ஹார்திக் பாண்டியா அதிரடி; தென்னாப்பிரிக்காவுக்கு 176 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT