முகப்பு
செய்திகள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன்: மேக்கிங் விடியோ வெளியீடு!

இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ்.

கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவுபெற்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்துக்குப் பிறகு கர்ணன் படம் வெளிவரவுள்ளது. இசை - சந்தோஷ் நாராயணன்.

இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்‌ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்கள் நடித்த ரஜிஷா நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது.

Advertisement

இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் விடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments