செய்திகள்

ரூ. 55 கோடிக்கு விற்கப்பட்ட தலைவி பட ஓடிடி உரிமை: கங்கனா ரணாவத் தகவல்

DIN

தலைவி படம் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்படாது என அப்படத்தின் கதாநாயகி கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.

தலைவி படம் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் போல நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை தலைவி படத்தின் கதாநாயகி கங்கனா ரணாவத் மறுத்துள்ளார் ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

தலைவி படம் இரு மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் தமிழ் மற்றும் ஹிந்திப் பதிப்புகள் - அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளங்களுக்கு ரூ. 55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன.

ஒரு படத்தின் தன்மையைப் பொறுத்தே ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்து முடிவெடுக்கவேண்டும். உதாரணமாக, தலைவி படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடியாது, ஏனெனில் அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. பங்கா, ஜட்ஜ்மெண்டல் ஹை கியா போன்ற படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிடலாம். ஓடிடியில் நேரடியாக வெளியிட்டே படத்துக்கான செலவைத் திரும்ப எடுத்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT