செய்திகள்

மறக்க முடியாத அனுபவம்: விஜய் பிறந்த நாளில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கம்!

DIN

விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளும் இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பிறந்த நாளுக்காக மாஸ்டர் படக்குழுவினர் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்கள். டிரெய்லர் வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்கள் இந்த போஸ்டரைச் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ள லோகேஷ் கனகராஜ், ட்விட்டரில் மேலும் தெரிவித்ததாவது:

நிச்சயமாக மாஸ்டர் படத்தில் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். எந்த ஒருநாளையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது, உங்களுடன் செலவழித்த எல்லாத் தருணங்களும் எப்போதும் நினைவில் இருக்கும். மாஸ்டர் படத்தை உருவாக்கக் காரணமாக இருந்ததற்கு நன்றி. பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT