கரோனாவால் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாக அறிவித்த நெருங்கிய தோழி: நடிகை சமந்தா பாராட்டு!
சமந்தாவின் நெருங்கிய தோழியான டிசைனர் ஷில்பா ரெட்டியும் அவரது கணவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சமந்தாவின் நெருங்கிய தோழியான டிசைனர் ஷில்பா ரெட்டியும் அவரது கணவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இத்தகவலை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் விடியோவாக வெளியிட்டுள்ள ஷில்பா ரெட்டி, கரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி என்கிற அறிவுரையை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து வெளிப்படையாக அறிவித்த தனது தோழிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் சமந்தா. ஷில்பாவைப் பாராட்டி அவர் எழுதியதாவது:
உங்களின் செயலுக்குத் தைரியம் வேண்டும் ஷில்பா. நாம் வாழும் சமூகத்தில் இதன்மூலம் சர்ச்சை ஏற்படக்கூடிய ஆபத்தும் உண்டு. உங்களைக் கண்டு அனைவரும் பெருமைப்படுகிறோம். இது எனக்கும் நேரலாம், உங்களுக்கும் நேரலாம், யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். ஆனால் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்திடவேண்டும் என்று பாராட்டியுள்ளார்.