செய்திகள்

ஓடிடியில் அடுத்தடுத்து வெளிவரவுள்ள தமிழ்ப் படங்கள்

DIN

யோகி பாபு நடித்துள்ள காக்டெயில், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி ஆகிய தமிழ்ப் படங்கள் அடுத்தடுத்து நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளன.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

சமீபத்தில் பொன்மகள் வந்தாள், பெண்குயின், யாதுமாகி நின்றாய் ஆகிய தமிழ்ப் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ள நிலையில் யோகி பாபு நடித்துள்ள காக்டெயில் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம் ஜீ5 தளத்தில் ஜூலை 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி படம் ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளிவரவுள்ளது. எல்,ஜி. சத்தியமூர்த்தி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இதுமட்டுமல்லாமல் வைபவ், வெங்கட் பிரபு, வாணி போஜன் நடிப்பில் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள லாக் அப் படம் ஜூலை மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஸ்ரேயா ரெட்டி நடித்த அண்டாவ காணோம், அருண் விஜய் நடித்த வா டீல், பிரியங்கா உபேந்திரா நடித்துள்ள மம்மி சேவ் மீ ஆகிய மூன்று படங்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் ஜே. சதீஷ் குமார் சமீபத்தில் கூறினார். 

திரையரங்குகளில் படத்தை வெளியிடுவது தற்போதைக்குச் சாத்தியமில்லாத நிலையில் பல தமிழ்ப் படங்கள் ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதனால் தமிழ்த் திரையுலகில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரிய செலவு இல்லாமல் வீட்டிலேயே புதுப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது. எனினும் மாஸ்டர், சூரரைப் போற்று ஆகிய பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் திரையரங்குகளில் மட்டுமே முதலில் வெளியாகவுள்ளன. இதனால் இந்தப் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளுக்குப் படையெடுப்பார்கள் என்று நம்பிக்கை வைத்துள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். தற்போதைய சூழலில் கரோனா ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கும்வரை ஓடிடியில் மேலும் பல தமிழ்ப் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT