செய்திகள்

பாலிவுட்டில் பரபரப்பு: ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ள ஏழு ஹிந்திப் படங்கள்!

DIN

பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் உள்பட ஏழு ஹிந்திப் படங்கள் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

இந்நிலையில் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன், ஆலியா பட், வருண் தவான் என பிரபலங்கள் நடித்த ஏழு ஹிந்திப் படங்கள் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

சுசாந்தி சிங் நடித்த தில் பேச்சாரா, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள லக்‌ஷ்மி பாம், அஜய் தேவ்கன், சஞ்சய் தத், ராணா டகுபதி, சோனாக்‌ஷி சின்ஹா, பரிநீத்தி சோப்ரா நடிப்பில் அபிஷேக் துதையா இயக்கியுள்ள புஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா, 21 வருடங்களுக்குப் பிறகு மகேஷ் பட் இயக்கியுள்ள சதக் 2 (நடிப்பு - ஆலியா பட், பூஜா பட், சஞ்சய் தத்), கூக்கி குலாதி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், இலியானா நடித்துள்ள பிக் புல், குனால் கெம்மு, கஜ்ராஜ் ராவ் நடித்துள்ள லூட்கேஸ், வித்யுத் ஜமால் நடித்துள்ள குடா ஹாபிஷ் ஆகிய ஏழு படங்களும் ஜூலை முதல் அக்டோபர் வரை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களில் முதல் படமாக சுசாந்த் சிங் நடித்துள்ள தில் பேச்சாரா வெளியாகவுள்ளது.

இந்த ஏழு படங்களில் பெரிய நடிகர்கள் நடித்த படங்களும் ஓடிடியில் நேரடியாக வெளியாவதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT