முகப்பு
செய்திகள்

இளம் வயதில் மரணமடைந்த நடிகர்: அதிர்ச்சியில் தமிழ்த் திரையுலகம்!

நடிகரும் மருத்துவருமான சேதுராமன் சென்னையில் வியாழக்கிழமை இதய செயலிழப்பால் உயிரிழந்தாா்.

Updated On : 27 மார்ச், 2020 at 12:19 PM
பகிர்:

நடிகரும் மருத்துவருமான சேதுராமன் சென்னையில் வியாழக்கிழமை இதய செயலிழப்பால் உயிரிழந்தாா்.

‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சேதுராமன், அதைத் தொடா்ந்து, ‘வாலிப ராஜா’, ‘சக்கபோடு போடு ராஜா’ உள்ளிட்ட 4 படங்களில் நடித்துள்ளாா். பிரபல தோல் மருத்துவரான அவா் இதய செயலிழப்பால் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். சென்னையில் ஜி கிளினிக் என்கிற மருத்துவமனையை நடத்தி வந்தார். திருமணமாகிவிட்ட சேதுராமனுக்கு ஒரு மகள் உண்டு.

இரு நாள்களுக்கு முன்பு கரோனா தொடர்பான விழிப்புணர்வு விடியோவை சேதுராமன் வெளியிட்டுள்ள நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.