செய்திகள்

அமேசானில் மீண்டும் வெளியான சிவகார்த்திகேயனின் ஹீரோ படம்

DIN

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஹீரோ படம் மீண்டும் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ஹீரோ. இந்த படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குநர் அட்லியின் உதவியாளரான போஸ்கோ பிரபு இந்த ஹீரோ படத்தின் கதை அவருடையது என்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை விசாரணை செய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் இந்த படத்தின் கதை ஹீரோ படத்தின் கதையை ஒத்து இருப்பதால் இயக்குநர் பி.எஸ். மித்ரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால் பிஎஸ் மித்ரன் இந்த அழைப்பை நிராகரித்ததை தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குக்குத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே ஹீரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விட்டது. பிறகு இந்தப் படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தப் படத்தின் தீர்ப்பு, இயக்குநர் பி.எஸ் .மித்ரனுக்கு எதிராக வந்தது. ஹீரோ படம் போஸ்கோ கதையை ஒத்து உள்ளது என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இந்த படத்தை வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அமேசான் தளத்தில் ஹீரோ படம் மீண்டும் வெளியாகியுள்ளது. படத்தின் மீதான தடையை எதிர்த்து படக்குழுவினர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்கள். குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினால் படத்தை வெளியிடலாம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து அமேசான் பிரைம் தளத்தில் ஹீரோ படம் மீண்டும் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT